பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல்: அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலம்!

கோவை: பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அவை அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலமானது.


கோவை: பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அவை அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலமானது.

பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேட்டில் உள்ள ஒரு குடோனில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதி குடோனை சோதனையிட்டனர். அதில் 40 டன் எடையுள்ள 905 உர மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உர மூட்டைகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு, குடோனில் பதுக்கி வைத்து, வேறு பெயரில் சாக்குப் பைகளில் நிரப்பப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உர மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் மேலாளர் சந்தோஷ் மற்றும் உரிமையாளர் மும்மூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். `அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் உர மூட்டைகளைக் கடத்தியதால், இவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....