கோவை அவினாசி சாலையில் 10.10 கி.மீ நீளத்தில் பாலம் பணிகள் தீவிரம்; 5 இடங்களில் சுரங்கநடைபாதை அமைக்க திட்டம்

கோவை: கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில், 10.10 கி.மீ நீளத்தில் தமிழகத்திலேயே மிகவும் நீண்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, பீளமேடு பகுதிகளில் இப்பாலப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில், 10.10 கி.மீ நீளத்தில் தமிழகத்திலேயே மிகவும் நீண்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, பீளமேடு பகுதிகளில் இப்பாலப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம்



கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப்படும் அவினாசி சாலையில் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன.

30 ஆண்டுகளுக்கு இருக்கும் வாகனப் பெருக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பாலம்

சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும், இச்சாலை இருப்பதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கி.மீ நீளத்தில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. இனிவரும் 30 ஆண்டுகளுக்கு இருக்கும் வாகனப் பெருக்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் இப்பாலம் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது, என கூறப்படுகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,



‘இந்த உயர்மட்ட மேம்பாலம் மொத்தம் 10.10 கிமீ நீளத்திற்கு அமையவுள்ளது. 17.25 மீ அகலத்தில் நான்கு வழிப் பாதையாக, நான்கு இடங்களில் ஏறு தளமும், நான்கு இடங்களில் இறங்கு தளமும் 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமையவுள்ளது. இப்பணியில், 10.50 மீட்டர் அகலத்தில் இரு புறமும் சேவைச் சாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமையவுள்ளது.

கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான ஐந்து இடங்களில் சுரங்கநடைபாதை அமையவுள்ளது. மேலும், மூன்று இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை திரும்பக்கட்டுதல் பணியும் நடைபெறவுள்ளது.

இந்த பாலம் கட்டி முடிக்கப்படும் போது தமிழகத்தின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெறுவதுடன் கோவையின் புதிய அடையாளமாகவும் இருக்கும், என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...