தமிழகத்தில் முதல் ஆட்சியராக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர்..! வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்!

திருப்பூர்: கொராேனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: கொராேனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, திருப்பூர் மாவட்டத்திற்கென 13,500 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாளொன்றுக்கு 400 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த திட்டமிட்டதில் கடந்த இரண்டு நாட்களாக 285 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் அவினாசி சாலை உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இன்று தமிழகத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு 13,500 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்காக நான்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் எனவும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் இதுவரை ஏற்படவில்லை என்றார்.

மேலும், எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் முன் களப்பணியாளர்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளும் வகையில், தானே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சில நிமிடங்கள் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்பு அனுப்பப்பட்டார்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...