வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்! போலீசாருடன் தள்ளுமுள்ளு

திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினரும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினரும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும், உடனடியாக மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குமரன் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது, போலீசார் தடுப்புகளை அமைத்து சிஐடியு தொழிற்சங்கத்தினரை தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த போராட்டத்தால் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...