கோவை: பறவைக் காய்ச்சல் மாநிலப் பேரிடராக கேரளா அறிவித்துள்ளது. இந்நிலையில் 38 ஆயிரம் பறவைகளைக் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் பகுதிகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் வாத்து, கோழி உள்பட வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளைக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பறவைகளைக் கொல்ல 11 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கால்நடை மருத்துவர், கால்நடை கண்காணிப்பாளர்கள், 2 துணை கண்காணிப்பாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், பஞ்சாயத்து ஊழியர், ஒரு காவலர் என தொழிலாளிகள் இடம்பெறுவார்கள்.
கொல்லப்படும் பறவைகளை எரிக்க தேவையான டீசல், சீனி, விறகு ஆகியவற்றை அந்தந்த பஞ்சாயத்துகள் வழங்க வேண்டும் என்று நேற்று காலை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள வனம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராஜீவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், `கேரளாவில் பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக அரசு அறிவித்துள்ளது. ஆலப்புழையில் 4 பஞ்சாயத்துகள் மற்றும் கோட்டயத்தில் 5 பஞ்சாயத்துக்களில் உள்ள 38 ஆயிரம் பறவைகளை கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.