கோவை: கோவையில் நடந்த இரு வேறு சம்பவங்களில் விஷம் குடித்த பெண் ஒருவரும், உணவு சமைத்தபோது தீயில் கருகிய ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை போத்தனூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன், கார்பெண்டர். இவரது மனைவி மரியபுஷ்பம் (வயது 50). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் விரக்தியில் இருந்த மரியபுஷ்பம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். வெகு நேரத்திற்குப் பிறகு கணவர் வந்து பார்த்தபோது மரியபுஷ்பம் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரியபுஷ்பம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கணபதி அருகே உள்ள ராஜ வீதியைச் சேர்ந்தவர் ரம்ஜான் அலி. இவரது மனைவி சபானா (வயது 29). நேற்று வீட்டிலிருந்த அவர் மண்எண்ணெய் அடுப்பில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சபானா பானுவின் உடையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சபானா பானுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.