22 ஆண்டுகளைக் கடந்த சிறைக்கைதிகளை விடுவிக்க அமைச்சர் வேலுமணியிடம் மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை!

கோவை: ஆண்டுகளைக் கடந்த சிறைக்கைதிகளை ஜாதி மத பேதமின்றி உடனடியாக விடுவிக்க அமைச்சர் வேலுமணியிடம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: ஆண்டுகளைக் கடந்த சிறைக்கைதிகளை ஜாதி மத பேதமின்றி உடனடியாக விடுவிக்க அமைச்சர் வேலுமணியிடம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்தனர்.



அப்போது, தமிழக சிறைகளில் 22 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத பேதமின்றி விடுதலை செய்யக்கோரிக்கை விடுத்தனர். மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.

இதுதொடர்பான முழு கோரிக்கையையும் கேட்ட அமைச்சர் இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக ம.ஜ.க. நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ்.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.ஆர்.பதுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ், சிறைவாசிகள் நல ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித், மற்றும் சிறைவாசிகள், குடும்பத்தார்கள் உடனிருந்தனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...