குடோனில் வைத்திருந்த ரூ. 15 லட்சம் பொருளை திருடிய என்ஜினீயர், மனைவிக்கு போலீஸ் வலை!

கோவை: குடோனில் வைத்திருந்த ரூ. 15 லட்சம் பொருட்களை திருடியதாக என்ஜினீயர் மற்றும் அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: குடோனில் வைத்திருந்த ரூ. 15 லட்சம் பொருட்களை திருடியதாக என்ஜினீயர் மற்றும் அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில்பாளையத்தை அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கே.அபிநயா. இவரும் இவரது கணவர் ஜனார்த்தனனும் தனியார் நிதி நிறுவனத்தில் 15 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தனர். அந்த நிதி நிறுவன உரிமையாளர் பணத்தை திருப்பித்தர முடியாததால் அதற்கு ஈடாக அலுவலக உபயோகப் பொருட்கள் மற்றும் நிதிநிறுவன உரிமையாளர் நடத்தி வந்த அழகு நிலைய உபகரணங்களைக் கொடுத்துள்ளார். அதனை ஜனார்த்தனனின் நண்பரான கோவை ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் என்ஜினீயர் அருண்குமார் மற்றும் அவரது மனைவி தீபதர்சினி ஆகியோரது பொறுப்பில் நீலாம்பூர் பகுதியில் உள்ள வாடகை குடோனில் வைத்தனர். அதற்கு 15 ஆயிரம் ரூபாய் வாடகை பேசி அபிநயாவின் கணவர் ஜனார்த்தனன் கடந்த இரண்டு மாதங்களாக செலுத்தி வந்தார். குடோன் சாவியை ஜனார்த்தனன் வசம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் குடும்ப நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கடந்தவாரம் அபிநயாவின் கணவர் ஜனார்த்தனன் குடோனில் பொருட்கள் உள்ளதா என்று பார்க்கச் சென்றார். அப்போது குடோனில் பூட்டப்பட்டிருந்த பூட்டினை திறக்கமுடியவில்லை. மேலும் ஏற்கனவே உள்ள பூட்டு உடைக்கப்பட்டு வேறு பூட்டு போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து என்ஜினீயர் அருண்குமார் மற்றும் அவரது மனைவி தீபதர்சினியிடம் போனில் கேட்டபோது அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை.

மீண்டும் கடந்த சனிக்கிழமை அவர்கள் குடோனுக்குச் சென்றபோது என்ஜினீயர் அருண்குமார் மற்றும் அவரது மனைவி தீபதர்சினி ஆகியோர் வேனில் வந்து பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக அருகில் உள்ளவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த அபிநயா மற்றும் அவரது கணவர் ஜனார்த்தனன் இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜா மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார். என்ஜினீயர் அருண்குமார் மற்றும் அவரது மனைவி தீபதர்சினி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...