கோவை: தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மழைக்காலத்தில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை: ஐ.பி.எஸ் படித்து டி.எஸ்.பி.யாக பணியாற்றும் மகளுக்கு அவரது தந்தையும் இன்ஸ்பெக்டருமான தந்தை சல்யூட் அடித்த சம்பவம் திருப்பதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திர காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் ஐ.பி.எஸ் முடித்துவிட்டு டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெஸ்ஸி பிரசாந்தி நேற்று காலை அங்கு வந்தார். அப்போது பணியிலிருந்த அவரது தந்தை ஷியாம் சுந்தர் மூத்த அதிகாரி என்ற அடிப்படையில் மகளுக்கு சல்யூட் அடித்தார். இந்தப் புகைப்படத்தை ஆந்திர போலீசார் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் கூறும்போது, `நான் பணியாற்றும் காவல்துறையில் இதுவரை உயரதிகாரிகளுக்கு என் கடமையைச் சரியாக செய்துள்ளேன். அதேபோல உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய என் மகளுக்கு நான் சல்யூட் அடித்தது காவல்துறையின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டது. இதை என் வாழ்நாளில் பெருமையாகக் கருதுகிறேன்' என்றார்.