கோவை-பாலக்காடு சாலை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை திட்டம்: நில உரிமையாளர்களுக்கு விரைவில் இழப்பீடு தொகை..!

கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு 5 கிராமங்களை சேர்ந்த 100 பேருக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக, வருவாய் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு 5 கிராமங்களை சேர்ந்த 100 பேருக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக, வருவாய் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கேரளா - நீலகிரி சுற்றுலா

கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள், பொதுவாக கோவை வழியை தான் பயன்படுத்துகின்றனர். இதேபோல், நீலகிரியில்உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் மலை காய்கறிகள் போன்றவை லாரிகள் மூலம், கோவை வழியாக தான் கேரளமாநிலம் கொச்சின் மற்றும் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேற்கு புறவழிச்சாலைதிட்டம் - ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு

கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் கோவை நகருக்குள்வந்து கோவை, குனியமுத்தூர் வழியாக பாலக்காடு சாலையைஅடைகின்றன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்ஏற்படுகிறது. எனவே, கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஊரக பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், கோவை மேற்கு புறவழிச்சாலைதிட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன்படி, மேற்கு புறவழிச்சாலைதிட்டமானது, கோவை-பாலக்காடு சாலையில்உள்ள மதுக்கரையில் இருந்து சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, சோமையம்பாளையம், வடவள்ளி,பன்னிமடை குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாய க்கன்பாளையத்தில் சென்று முடிகிறது.

இந்த சாலை அமைப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்முதற்கட்டமாக ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 32 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் முதற்கட்டமாக12 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5கிராமங்களை சேர்ந்த 100 பேருக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில்,தற்போது முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து மதுக்கரை, மாதம்பட்டி, பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூர் ஆகிய 5கிராமங்களை சேர்ந்த 100 பேருக்கு இந்த மாத இறுதிக்குள் இழப்பீடுதொகை வழங்க திட்டமிட்டு உள்ளோம். இழப்பீடு தொகை வழங்கியதும்பணிகள் துவங்கப்படும்,’’ என்றனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...