உதகை - மசினகுடி சாலையை அடிக்கடி மறிக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அவதி - வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் திணறல்!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்து சிகிச்சையளித்து காட்டிலேயே விட்டனர்.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்து சிகிச்சையளித்து காட்டிலேயே விட்டனர்.



இந்நிலையில், அந்த ஆண் யானை பொக்காபும் வனத்தை விட்டு வெளியே வந்து மசினகுடி - உதகை சாலையை வழிமறித்து நிற்கிறது. இதனால் வாகனங்கள் சாலையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றன.

இது குறித்து, தகவல் கிடைத்தவுடன் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுக்குள் விரட்டுகின்றனர். ஒரு நாளைக்கு பல முறை சாலையின் குறுக்கே வந்து நிற்பதால் வனத்துறைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக வன ஊழியர்களை வைத்து யானையை கண்காணித்த சிங்காரா வனச்சரக அலுவலர் காந்தனிடம் இதுகுறித்து கேட்டபோது, அந்த யானை சிகிச்சையளித்த பிறகு தான் சாலையில் வந்து நிற்கிறது. மக்களையோ, சாலையில் செல்லும் வாகனங்களையோ ஒன்றும் செய்வதில்லை. யானை சாலையின் குறுக்கே நிற்பதைக் கண்டால் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். யானையிடம் அத்துமீறுவதோ, உணவளிப்பதோ தண்டனைக்குரிய செயலாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...