கோவை: பொள்ளாச்சியில் பஞ்சு வியாபாரியின் வாகனத்தில் இருந்து ரூ.2.55 லட்சம் பணம் திருடிய ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: பொள்ளாச்சியில் பஞ்சு வியாபாரியின் வாகனத்தில் இருந்து ரூ.2.55 லட்சம் பணம் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55) பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சி புதிய திட்ட சாலையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து, ரூபாய் 2 லட்சத்து 55 ஆயிரம் பணம் எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு, அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக பணத்தை பறிகொடுத்த பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி தில்லை நகர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ராஜேஷ் (30), சுப்பிரமணியன் (34), மகேந்திரன் ( 36) ஆகிய மூவரும் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், பொள்ளாச்சி புதிய திட்ட சாலை பகுதியில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த பஞ்சு வியாபாரியை பின் தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை திருடிச் சென்றது இவர்கள் தான் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ரூபாய் 2 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.