கோவை: கோவை பகுதியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயன்பாளையத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அந்தப் பகுதியில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை 9.30 மணி அளவில் தேவராயபுரத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓட்டலில் இருந்து புறப்பட்டது முதல் தேவராயபுரம் அடையும் வரை சாலை நெடுகிலும் மக்கள் வெள்ளமென கூடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் `வருங்கால முதல்வரே, அடுத்த முதல்வரே, தளபதி ஸ்டாலின் அவர்களே' என ஆண், பெண்கள் இருபுறங்களிலும் இருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் தேவராயபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடைக்கு வந்தார். தொண்டாமுத்தூர் தொகுதி செல்வதற்குமுன் வடவள்ளி பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் அளவுக்கு அதிகமான மக்கள் கூடியிருப்பதைக் கண்ட ஸ்டாலின் காரின் கதவைத் திறந்து வெளியே வந்து காரில் நின்றபடி மக்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது மக்களின் உற்சாக வரவேற்புக்கு நன்றி கூறிக்கொண்டார்.தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ (மாநகர கிழக்கு), பையா கவுண்டர் (மாநகர மேற்கு), சி. ஆர் ராமச்சந்திரன (புறநகர் வடக்கு), தென்றல் செல்வராஜ் (புறநகர் தெற்கு), சேனாதிபதி (புறநகர் கிழக்கு) ஆகியோர் தலைமையில் மேடையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.