லங்கா கார்னர் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ்!

கோவை: கோவை லங்கா கார்னர் அருகே நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.


கோவை: கோவை லங்கா கார்னர் அருகே நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை அருகே திருச்சி சாலையில் இருந்து பெரிய கடை வீதி செல்லும் வழியில் லங்கா கார்னர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் மழைக் காலங்களில் சுமார் 3 அடி தூரம் வரை நீர் தேங்கி நிற்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கும்.

லங்கா கார்னர் அருகே வாலாங்குளத்துக்கு மழை நீரை கொண்டு போய் சேர்க்கும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்படிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘லங்கா கார்னர் பகுதியில் நோட்டீஸ் வழங்கியுள்ள கட்டட உரிமையாளர்கள் வாய்க்கால் பகுதியில் உள்ள தங்களது கட்டடங்களை அகற்ற வேண்டும். இல்லை என்றால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...