பாரம்பரிய விவசாயம்‌ மூலம்‌ மண்ணை வளப்படுத்தும்‌ ஞானம்‌ பெற்றவர்‌ நம்மாழ்வார்‌: நினைவு நாளில்‌ சத்குரு புகழாரம்‌!

கோவை: பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் மூலம்‌ மண்ணை வளப்படுத்தும்‌ ஞானம்‌ மிகுந்த ஒரு எளிய மனிதர்‌ என இயற்கை வேளாண்‌ விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில்‌ சத்குரு புகழாரம்‌ சூட்டியுள்ளார்‌.


கோவை: பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் மூலம்‌ மண்ணை வளப்படுத்தும்‌ ஞானம்‌ மிகுந்த ஒரு எளிய மனிதர்‌ என இயற்கை வேளாண்‌ விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில்‌ சத்குரு புகழாரம்‌ சூட்டியுள்ளார்‌.



இது தொடர்பாக அவர்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில், 'நம்மாழ்வார்‌ ஐயா பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால்‌ மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம்‌ மிகுந்த ஓர் எளிய மனிதர்‌. ஓர் துறவியாகவும்‌ நெறிசாரா கதைகள்‌ சொல்பவராகவும்‌ போற்றப்பட்டவர்‌. ஈஷா விவசாய இயக்கத்தின்‌ தொடக்கக் காலங்களில்‌ அவர்‌ ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன்‌ நினைவுகூர்கிறோம்‌' என பதிவிட்டுள்ளார்‌.

நம்மாழ்வாரின்‌ 7-ம்‌ ஆண்டு நினைவு தினத்தையொட்டி காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மரம்சார்ந்த விவசாய திட்டத்தின்‌ சார்பில்‌ திருவாரூர்‌, புதுக்கோட்டை, அரியலூர்‌, தர்மபுரி, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, நாமக்கல்‌, ஈரோடு, கரூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, தென்காசி உள்பட தமிழகத்தின்‌ 20-க்கும்‌ மேற்பட்ட மாவட்டங்களில்‌ விவசாயிகள்‌ தங்கள்‌ குடும்பத்தினருடன்‌ மரக்கன்றுகள்‌ நட்டு நம்மாழ்வாரின்‌ சேவையை நன்றியுடன்‌ நினைவு கூர்ந்தனர்‌.



நம்மாழ்வார்‌ விட்டுச் சென்ற பணியை ஈஷா விவசாய இயக்கம்‌ அவர்‌ காட்டிய வழியில்‌ செயலாற்றி வருகிறது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குருவால்‌ தொடங்கப்பட்ட இந்த இயக்கம்‌ 2015-ம்‌ ஆண்டு முதல்‌ தமிழகம்‌ முழுவதும்‌ மாதந்தோறும்‌ இயற்கை விவசாய களப்‌ பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் இதுவரை 8,700-க்கும்‌ மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

நம்மாழ்வார்‌ உயிருடன்‌ இருந்த காலத்தில்‌ ஈஷாவின்‌ சுற்றுச்சூழல்‌ பணிகள்‌ அனைத்திலும்‌ அவர்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ இணைந்து செயல்‌புரிந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மண்ணை வளமாக வைத்துக்கொள்ள நாட்டு மாடுகளும்‌, மரங்களும்‌ அவசியம்‌ என்பதை அவர்‌ தொடர்ந்து வலியுறுத்திவந்தார்‌. அதன்‌ அடிப்படையில் விவசாய நிலங்களில்‌ மரங்கள்‌ நடும்‌ பணியை ஈஷா‌ ஊக்குவித்து வருகிறது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...