கோவை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மேற்கு மண்டலம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதுதொடர்பாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பெரியய்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டைக் கொண்டாடும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து சாலை விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாட வேண்டுகோள் வைக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டுதின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இன்று (வியாழக்கிழமை) இரவு இளைஞர்கள் ஜாலி ரைடு, மது அருந்திவிட்டு வேகமாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சட்ட ஒழுங்கிற்கு பங்கம் விளைவிப்பவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'
'பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், சினிமா தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி மேற்கு மண்டலம் முழுவதும் 10 ஆயிரம்போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆதலால் இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து பணி செய்யக்கூடிய போலீசாருக்கு பொதுமக்கள், இளைஞர்கள், அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து விபத்து இல்லாத, பாதுகாப்பான 2021-ஆம் ஆண்டில் நாம் அனைவரும் அடி எடுத்து வைக்க வேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.