கோவை: பஸ் டிரைவரை செருப்பால் அடித்ததுடன் பெண் போலீசின் கையைக் கடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து கோவைக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சிங்காநல்லூர் அருகே அந்த பஸ் வந்தபோது அந்த வழியாக நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த சுமதி (வயது 36) என்பவர் தனது சகோதரர் செந்தில்குமாருடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது போக்குவரத்து நெரிசல் இருந்ததால் வழி கிடைக்காமல் ஆத்திரமடைந்த செந்தில்குமாரும் அவரது அக்கா சுமதியும் பஸ்சை தடுத்து நிறுத்தினர். மேலும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் செல்வகுமாருடன் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் தகாத வார்த்தைகளைப் பேசி டிரைவர் செல்வகுமாரை செருப்பால் தாக்கி பஸ் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திலிருந்து பெண் போலீஸ் கௌதமி என்பவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுமதி பெண் போலீசின் கையைக் கடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண் கடித்ததில் காயமடைந்த பெண் போலீஸை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகராறில் ஈடுபட்டது தொடர்பாக செந்தில்குமார், சுமதி மற்றும் மணிகண்டன் ஆகியோரை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.