திருப்பூர்: எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதல்வரும், அ.தி.மு.க நிறுவனருமான எம்.ஜி ஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அ.தி.மு.க.வினர் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பிருந்து மாநகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலர வேண்டுமென உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.