கோவை: கோவை அருகே பனைமரம் ஏறியபோது தவறி கீழே விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, ஜமீன் ஊத்துக்குளி பூடிபாளையம், நாடார் தெரு பகுதியில் வசித்தவர் சண்முகவடிவேல் (வயது 68). இவர் நேற்று மாலை ஆனமலை, பத்திரகாளியம்மன் கோவில், தங்கவேல் தோட்டம், மர்ச நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறி நுங்கு பறிக்கச் சென்றார். அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினார்.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.