வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 3 பேர் கைது!

கோவை: வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை போத்தனூர் போலீசார் நேற்று பொள்ளாச்சி ரோடு எல்.ஐ.சி காலனியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போத்தனூர் கணேசபுரத்தைச் சேர்ந்த ஹரிதாசை கைது செய்து 1.250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இதேபோல சிங்காநல்லூர் போலீசார் நெசவாளர் காலனியில் நேற்று ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2.750 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் 790 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த காரமடை திம்பம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்றதாக உப்பிலி பாளையத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் என்பவரை காரமடை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...