கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனை தேவாலயங்களில் நடைபெற உள்ளன. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று நள்ளிரவு முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படுகின்றன்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனை கொரானா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதன்படி இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் வழிபாட்டுப் பாடல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒரு புறத்திலிருந்து குழந்தை இயேசுவை குடிலுக்கு கொண்டு சென்று வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது.
இதேபோல புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், 4-ம் நம்பர் புனித பாத்திமா அன்னை தேவாலயம், ரத்தினபுரி புனித சின்னப்பர் தேவாலயம், புருக்பாண்ட் சாலையில் உள்ள சிரியன் சர்ச், அத்திப்பாளையம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கோவைபுதூர் புனித குழந்தை இயேசு ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவும் சிறப்பு ஆராதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டிதேவாலயங்கள் அனைத்தும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆயர் ஜான் குணசீலன் தலைமையிலும், ஜோன்ஸ் சர்ச்சில் ஆயர் சார்லஸ் தலைமையிலும், இமானுவேல் ஆலயத்தில் ஆயர் ராஜா பாஸ்கர் தலைமையிலும், காந்திபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்னபாஸ் தலைமையிலும், சுந்தராபுரம் கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆயர் வசந்தகுமார் தலைமையிலும், நாளை அதிகாலை சிறப்பு ஆராதனைகள் நடக்கின்றன. இதேபோல கோவையில் போத்தனூர், மலுமிச்சம்பட்டி, மதுக்கரை, கோவை புதூர், பேரூர், டி.வி.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியுடன் கிறிஸ்துமஸ் ஆராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒரு இருக்கையில் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் மாஸ்க் அணிந்து வரவும் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தேவாலயங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.