கோவை: தி.மு.க. கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக அமைப்புச் செயலாளர் ஆர.எஸ்.பாரதி கூறினார்.
கோவை: தி.மு.க. கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக அமைப்புச் செயலாளர் ஆர.எஸ்.பாரதி கூறினார்.

தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினத்தையொட்டி கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சிப் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு ஏற்ப வரும் ஜனவரி 10-ந்தேதி வரை தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம். இதனை மக்களிடம் விளக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல்களை விவரித்து தி.மு.க.வினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டுமெனவும் மக்களிடையே வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மலுமிச்சம்பட்டி பகுதி நால்ரோட்டுப் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.