கோவை: கோவையில் 4 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி வேன் டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்தது.
கோவை: கோவையில் 4 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி வேன் டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்தது.
கோவை காரமடை பிளிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 37). தனியார் பள்ளி வேன் டிரைவர். அந்த வேனில் கண்ணார் பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 50) உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த 29.1.2019 அன்று பள்ளி முடிந்ததும் வழக்கம்போல மாணவ - மாணவிகளை வேனில் அழைத்துச் சென்று அவரவர் வீடுகளில் கொண்டு விட்டனர். டிரைவர் கோவிந்தராஜ், உதவியாளர் மாரிமுத்து ஆகிய இருவரும் வேனில் இருந்த 4 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் வழக்கம்போல மாணவியை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் அந்த மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்று காட்டினர். அப்போதுதான் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி வேன் டிரைவர் கோவிந்தராஜ், உரிமையாளர் மாரிமுத்து ஆக இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கோவிந்தராஜ், உதவியாளர் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு நேற்று கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.