கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தூத்துக்குடிக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று பாலக்காடு கோட்ட மேலாளருக்கு பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.

பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளருக்கு பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் ஒரு மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட கோவை - ராமேஸ்வரம், கோவை - தூத்துக்குடி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். மேலும் கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை, தென்காசி வழியாக ரயில் இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார்த் தொழில் முக்கியமானதாக உள்ளது. எனவே திப்பம்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்க வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்துக்கு ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பராம்பாளையம் ஆற்றின் நீரை ரயில் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்தால் பராமரிப்பு வசதிகள் செய்து கொடுக்க முடியும். மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.