கோவை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ்காரர் மீது வாகனம் மோதியதில் அவர் பலியானார்.
கோவை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ்காரர் மீது வாகனம் மோதியதில் அவர் பலியானார்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 26). இவர் கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆதலால் தர்மபுரி செல்வதற்காக கேஸுவல் லீவு எடுத்தார். பிறகு 17-ஆம் தேதியிலிருந்து மெடிக்கல் லீவ் ஆக மாற்றி பெற்றுக்கொண்டு ஊருக்குச் சென்றார்.
நேற்று அவர் தர்மபுரியில் இருக்கும்போது திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணின் தகப்பனாருக்கு விபத்து ஏற்பட்டு கால் எலும்பு உடைந்தது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை போலீஸ்காரர் ராஜசேகரன் சேலம் அழைத்து வந்தார்.
சேலம் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்த பிறகு அதிகாலை வேளையில் ராஜசேகரன் மருத்துவமனை வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது சாலையில் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கருமத்தம்பட்டி போலீசார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.