கோவை: வால்பாறையில் இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மெக்கானிக் ரவி. இவருடைய மகன் அபினேஷ்(24). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று வால்பாறை இருந்து இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சிக்குச் சென்று கொண்டிருந்தார்.

பொள்ளாச்சி சாலையில் வால்பாறை பழைய காடு என்ற பகுதியில் அவர் சென்ற போது, பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அகிலேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்த காடம்பாறை காவல்துறையினர் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமைக் காவலர் முருக பாபு நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் டிப்பர் லாரி ஓட்டி வந்த கார்த்திகேயன் ஓட்டுனர் கைது செய்தனர்.
பின்னர், அபினேஷ் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.