கோவை: செல்வபுரம் பகுதியில் 3 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன.

கோவை செல்வபுரம் சேர்த்துமா வாய்க்கால் அருகே சுன்னத் ஜமாத் கபர்ஸ்தான் உள்ளது. இங்கு 6-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. நேற்று நள்ளிரவு கபர்ஸ்தான் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சந்தன மரங்களை வெட்டினர். பின்னர் இரண்டு அடி விட்டமுள்ள சந்தனமரத் துண்டுகளை வெட்டிச் சென்றனர்.
சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதை அறிந்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.