வெவ்வேறு சம்பவம்: விமானப்படை அதிகாரி, கல்லூரி மாணவி மாயம்!

கோவை: வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் விமானப்படை அதிகாரி மற்றும் கல்லூரி மாணவி மாயமானார்.



கோவை: வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் விமானப்படை அதிகாரி மற்றும் கல்லூரி மாணவி மாயமானார்.

கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நாராயணன் (வயது 60). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான இவர் கடந்த 7-ஆம் தேதி மதியம் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். பிறகு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி சுஜித்ரா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நாராயணனை தேடி வருகின்றனர்.

இதேபோல கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த ரமேஷ் மகள் மகேஸ்வரி (வயது 17). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தபடி ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மகேஸ்வரி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மகேஸ்வரியின் தாயார் வால்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...