குன்னூர் கொலக்கம்பை பகுதியில் 8 வயது சிறுமி மாயம்: தேடும் பணி தீவிரம்!

நீலகிரி: குன்னூர் கொலக்கம்பை பகுதியில் நாணயமான சிறுமி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


நீலகிரி: குன்னூர் கொலக்கம்பை பகுதியில் நாணயமான சிறுமி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியி்ல் தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிபவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமண் ராம். இவரது 8 வயது மகளை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில், புதன்கிழமை அவரை கிரேக்மாேர் வனப்பகுதி மற்றும் அங்குள்ள நீரோடையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் தீவிராக தேடி வருகின்றனர்.



சந்தேகத்தின்பேரில் ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளைஞரைப் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் பிலிப் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இளைஞர் அந்தச்சிறுமியை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்றதாகவும், நீரோடை அருகி்ல் விட்டுவிட்டு வந்ததாகவும் மாறி மாறி தகவலைக் கூறி வருகிறார். இதனடிப்படையில் ஆற்றுப் பகுதியிலும், வனப்பகுதியிலும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆனால் அந்த இளைஞன் கூறும் இடங்களில் எந்தவித தடயங்களும் கிடைக்காததால் சிறுமியைக் கண்டறிவதில் காவல்துறையினருக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் கொலக்கம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...