கோவை: விபத்தில் சிக்கியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவை அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் தனது நண்பரான பிரபு (வயது 27), என்பவருடன் தடாகம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நர்சரி கார்டன் என்ற பஸ் நிறுத்தத்தில் வந்த போது அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த கணுவாய் காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் மீதுவ் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு முன்பாக இரண்டு பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.