கோவை: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கவும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடையை 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மாத ஓய்வூதியமாக 2000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

மேலும், குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதை விட பள்ளிகளைத் திறந்து அவர்களுக்குரிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 22 முட்டைகள் தற்போது 10 முட்டைகளாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.