முன்னாள் முதல்வர் காமராஜரின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கைது செய்யக் கோரி பனங்காட்டுப் படை கட்சியினர் புகார்!

திருப்பூர்: காமராஜரின் பெயரை தவறாக பயன்படுத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கைது செய்யக் கோரி பனங்காட்டுப் படை கட்சியினர் திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.



திருப்பூர்: காமராஜரின் பெயரை தவறாக பயன்படுத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கைது செய்யக் கோரி பனங்காட்டுப் படை கட்சியினர் திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களை வாழும் காமராஜர் என அரசியல் லாப நோக்கத்திற்காக தவறான முறையில் விளம்பரம் செய்வதாகவும், இந்த செயல் பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பனங்காட்டுப்படை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தவறாகப் பயன்படுத்திய மக்கள் நீதி மையம் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...