கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில், கோவையின் மையப்பகுதியில் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் குறித்து டாக்ட் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்கள் நிறுவனங்கள் முடங்கி இருந்தன. தொழில் நிறுவனங்களை பாதுகாக்க மத்திய அரசு கடன் திட்டங்களை அறிவித்தது. இந்த கடன் திட்டத்தால், கோவையில் ஜாப் ஆர்டர்கள் மட்டும் செய்து வரும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்களுக்கு, எந்த பலனும் இல்லை. எனவே, மத்திய அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை உடனடியாக தந்து உதவ வேண்டும்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்திடும் பொருட்களுக்கு 30 சதவீதம் வரை விலைகளை உயர்த்திவிட்டன. இதனால், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வழங்கியுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 30 சதவீதம் வரை விலைகளை உயர்த்தி தரவேண்டும்.
குறுந்தொழில் முனைவோர்கள் செய்து கொடுக்கும் ஆர்டர்களுக்கு, உற்பத்தி நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அதற்கான தொகையை தர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமார் 20 ஆயிரம் குறுந்தொழில் முனைவோர்கள் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வருகின்றனர். கோவையின் மையப்பகுதியில் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும். அதில், அரசு அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி தரவேண்டும். இந்த கோரிக்கையை பிரதான கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.