வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவையில் மலர் தூவி வீரவணக்கம்!

கோவை: விவசாய சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



கோவை: வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவையில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 



மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மத்திய அரசின் விவசாய சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். 

இதனிடையே, டெல்லியில் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வந்த விவசாயிகளில் சுமார் 40 விவசாயிகள் உயிரிழந்தனர். 

இந்நிலையில், இன்று விவசாய தினத்தை முன்னிட்டு உயிரிழந்த அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர்.



மேலும் விவசாய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், குருதுவாரா அமைப்பின் தலைவர் இக்பால் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவசாமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...