கோவை: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை ஹோப்காலேஜ் பகுதியில் ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்ட அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். அவ்வமைப்பின் நிர்வாகிகளை முன்னெச்சரிக்கையாக வீடுகளில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை தரதரவென இழுத்துச் சென்று காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.