கோவை: திமுக சார்பில் நடத்தப்படும் 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை: திமுக சார்பில் நடத்தப்படும் 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இன்று காலை கோவை மாநகராட்சி 62-வது வார்டு பாலசுந்தரம் லேஅவுட், அய்யர் லே அவுட் பகுதியில் 'அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்' கையெழுத்து இயக்கம் மற்றும் வார்டு சபைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா. கார்த்திக் எம். எல். ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகைச்யில், அ.தி.மு.க ஆட்சியில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு, எரியாத தெருவிளக்குகள், குண்டும், குழியுமான சாலைகள், கொசுத்தொல்லை,மழைநீர் வடிகால்களில் சாக்கடைக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவது, தொற்றுநோய்கள் பரவுதல், பாதாள சாக்கடைப் பணிகள் போன்றவை சுமார் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கின்றன என்று தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் சிங்கை பிரபாகரன், சிங்காநல்லூர் பகுதி - 2 பொறுப்பாளர் மு. சிவா, வட்டச் செயலாளர் சிங்கை அன்பு, நகர்நலச் சங்க நிர்வாகிகள், தி.மு.க.வினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.