கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு: தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழகம் முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் தங்களது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாட்டு மக்கள் ஆண்டு தோறும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியுடன் பங்கு பெற்று வருகின்றனர். ஏற்கனவே 2017-ம் ஆண்டு முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது காளைகள் மற்றும் மாடு பிடிக்கும் வீரர்கள் நேரடியாகக் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, அடுத்த (2021) ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவுக்கேற்ப தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவுக்கு அதிகரிக்காமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடங்களில் கோவிட் - 19 தொற்று இல்லை என்று அவசியம் சான்று பெற்றிருக்க வேண்டும். இந் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...