கோவை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நஞ்சப்பா ரோடு பார் கேட் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு கூறினார்.

கோவை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, அரசு பஸ் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அவிநாசி ரோடு மேம்பாலத்தின் நஞ்சப்பா ரோடு பார் கேட் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அவினாசி ரோட்டில் இருந்து நஞ்சப்பா ரோட்டில் வாகனங்கள் வரலாம். ஆனால் காந்திபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பார் கேட்டில் இருந்து சிறை ரோடு வழியாக வ.உ.சி பூங்கா, எல்.ஐ.சி சந்திப்பு வழியாக அவிநாசி சாலை அடையலாம். ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் நடுவில் உள்ள தடுப்புகள் அகற்றப்படும். கணபதி 3-ம் நம்பர் பஸ் நிலையம் பஸ் நிறுத்த மட்டும் செயல்படும். அங்கு பஸ்களை நீண்ட நேரம் நிறுத்த அனுமதி இல்லை.
டெஸ்டூல் பாலத்திலிருந்து சூர்யா மருத்துவமனை வரை சாலையோரக் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கரும்புக்கடை சிக்னல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். ஆம்னி பஸ்கள் அவிநாசி சாலையில் பல இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள். இனி லட்சுமி மில் சந்திப்பு டைடல் பார்க் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி ரோட்டில் மேம்பாலம் பணியை ஒட்டி சாலையின் நடுவில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட உள்ளன. அந்த தடுப்புக் கற்கள் நவ இந்தியா சந்திப்பிலிருந்து சின்னசாமி சாலை இரண்டு அடுக்கு மேம்பாலம் வரை இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. அவிநாசி சாலையில் நடைபாதை பகுதிகளும் அகற்றப்பட்டு மூன்றடுக்கு மட்டும் இடைவெளிவிட்டு பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படும். மேம்பாலப் பணிகள் நடந்தாலும் இருபுறமும் வாகனங்கள் சிரமமின்றி செல்ல வசதி செய்யப்படும். ஆர்.எஸ் புரம், டி.பி.ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. எனவே கௌலி பிரவுன் சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை சந்திக்கும் பகுதியின் முன்பு வாகனங்கள் சுற்றிச் சென்றன. தற்போது மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புகள் அகற்றப்பட்டு வாகனங்கள் வரும் சாலையில் இருந்து நேராக மேட்டுப்பாளையம் சாலையில் திரும்ப வசதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.