கோவை: கொரோனா பரவல் காரணமாக ஓடாத தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பஸ், வேன்களுக்கு அபராதத்துடன் சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. கொரோனாவின் தாக்கம் குறைந்து தொடர்ந்து முழு ஊரடங்கில் பல்வேறுகட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. தனியார் பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் அவற்றுக்குச் சொந்தமான பஸ், வேன்கள் இயக்கப்படாமல் உள்ளன. ஆனால் இந்த வாகனங்களுக்கு அபராதத் தொகையுடன் சாலை வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு அவற்றின் பஸ், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாத நிலையில் சாலை வரி செலுத்தச் சொல்வது தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்துதுறை சார்பில் கூறும்போது:-
கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை மற்றும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை உள்ள இரண்டு காலாண்டுக்கான சாலை வரியை அபராதமின்றி செலுத்த கடந்த மாதம் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தோம். அதன்பிறகு கடந்த 15-ஆம் தேதி வரை சாலை வரி செலுத்த 20 சதவீதமும் அடுத்த மாதம் ஜனவரி 15-ஆம் தேதி வரை செலுத்துவோர் 50 சதவீதம் அபராதம் விதிக்க வேண்டும். ஸ்டாப் பேஜ் சான்றிதழ் இருந்தால் சாலை வரி ரத்து செய்யப்படுகிறது. அது இல்லாதவர்களைத்தான் வரி செலுத்தச் சொல்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, `கொரோனா காரணமாக இன்று வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஓடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஸ்டாப் பேஜ் சான்றிதழ் இல்லை என்று கூறி சாலை வரியை அபராதத்துடன் செலுத்தச் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவித்தார்களா என்று தெரியாது. கொரானோ காரணமாக பள்ளி அலுவலகப் பணியாளர்கள் யாரும் வேலைக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக வட்டாரப் போக்குவரத்துதுறை சார்பில் அனுப்பிய இ மெயில் விவரங்கள் சரியாகத் தெரியாமலிருக்க வாய்ப்புள்ளது. எனவே சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.