நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாக மினி கிளினிக் தொடக்கம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக`அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக`அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழக மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்திசெய்ய தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன் பல இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார்.



இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஜெகதளா கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த கிளினிக்கைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, `இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பர். அங்கு மருத்துவ உபகரணங்களும் இருக்கும். சளி, காய்ச்சல், தலைவலிக்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர், `அம்மா மினி கிளினிக்' காலை 8 மணி முதல் 12 வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் மினிகிளினிக்குகள் செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு 20 கிளினிக்குகளும், நகரப் பகுதிகளுக்கு 5 கிளினிக்குகளும், 3 நடமாடும் கிளினிக்குகளும் மொத்தம் 28 மினி கிளினிக்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்சியில் குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி விநோத், குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்ஜித் சிங், மருத்துவ துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...