சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை நீரைச் செறிவூட்டி பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

கோவை: சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை நீரைச் செறிவூட்டி பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும் என்று கூறும் அப்பகுதி மக்கள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கோவை: சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை நீரைச் செறிவூட்டி பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும் என்று கூறும் அப்பகுதி மக்கள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சூலூர் பகுதிகளில் சாக்கடைக் கழிவு நீர் செல்வதனால் அங்கு குடிநீர் மாசடைந்துள்ளது.நொய்யல் கழிவு நீரை மடை மாற்றுவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசனமின்றி போகும். நன்னீர்க் குட்டையில் கழிவு நீரைத் தேக்கினால் மாசடையுமென பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு 3 மாதங்கள்கூட செயல்படாத சுத்திகரிப்பு நிலையம் கோவை மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீரைக் கொண்டு நிலத்தடி நீரை செறிவூட்டல் செய்ய பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் இயங்கி வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் கொண்டு சென்று செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள காடுகுட்டை பகுதியில் உள்ள 60 குட்டைகளில் நிரப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா செட்டிப்பாளையம் காடுகுட்டைப் பகுதியில் நடைபெற்றது. கழிவுநீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீரை செறிவூட்ட அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது.

மேலும், சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதில்லை எனவும், ஆண்டுக்கு மூன்று மாதங்கள்கூட இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நீரை தற்போது சூலூர் குளம், கண்ணம்பாளையம், பள்ளபாளையம் போன்ற விவசாய நிலங்களில் பயன்படுத்தி வருவதால் நிலத்தடி நீர் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அந்தளவுக்கு நீரின் தன்மை மிக மோசமாக உள்ளது. இத்தகைய சூழலில் கழிவுநீரை செட்டிப்பாளையம் பகுதியில் சேகரித்து சுல்தான்பேட்டை மேற்கு பகுதியில் உள்ள கிராம குட்டைகளில் சேகரித்தால் அந்தப் பகுதியிலும் நிலத்தடி நீர் கெட்டுப் போகும் அபாயம் உள்ளது என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

இதற்குப் பதிலாக செட்டிப்பாளையம் பகுதியில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாய வாய்க்காலில் இருந்து தண்ணீரை பம்ப் செய்து குட்டைகளில் சேமித்தால் நிலத்தடி நீர் உயரும். அத்துடன் நீரின் தன்மையும் மாறாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவால் பட்டணம் பகுதியில் உள்ள எட்டு குட்டைகளுக்கு நீர் நிரப்ப பட்டணம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதுதொடர்பாக நாகமநாய்க்கன்பாளையத்தில் ஊர்க்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கழிவுநீர் சேகரிப்பு மூலம் தங்கள் பகுதியில் பகுதி குட்டைகளுக்கு கழிவுநீர் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்ட அனுமதிக்கக்கூடாது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தீர்மானம் பட்டணம் கிராம நிர்வாக அலுவலர் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக அனுப்பப்பட்டது.

மேலும் அந்த மனுவில், மழை நீர் மட்டும் போதும், சாக்கடை நீரைக் கொண்டு குட்டைகளை நிரப்பி நல்ல நீரை மாசுபடுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே சாக்கடை நீரால் பயனடையும் சூலூர் உள்ளிட்ட பல்வேறு விவசாய விளை நிலங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கரையோரப்பகுதியில் விவசாயம் கேள்விக்குள்ளாகும் என கூறியுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் தேக்கப்பட்டால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...