ஸ்டீல் - மூலப்பொருள் தொடர் விலை ஏற்றம்: கட்டுப்படுத்த அரசுக்கு கிரெடாய் அமைப்பு கோரிக்கை!

கோவை: ஸ்டீல் மற்றும் மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கிரெடாய் கோவை அமைப்பு கூறியுள்ளது. இதுவிஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: ஸ்டீல் மற்றும் மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கிரெடாய் கோவை அமைப்பு கூறியுள்ளது. இதுவிஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

ஸ்டீலுக்கான தேவை அதிகரித்து வருவதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் மாதந்தோறும் ஸ்டீல் விலையை அதிகரித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக கிரெடாய் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் சுரேந்தர் விட்டல் கூறியதாவது: 

2020- ஆவது ஆண்டின் துவக்கத்தில் ஒரு டன் ரூ. 40 ஆயிரமாக இருந்த ஸ்டீல் விலை தற்போது டிசம்பர் மாதத்தில் ஒரு டன்னுக்கு ரூ.58 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வு ஸ்டீல் தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் ஒரு குழுவாக செயல்பட்டு செய்யும் ஓர் தவறான வணிக நெறியாகும். ஸ்டீல் விலை மட்டுமன்றி பிற கட்டுமானப் பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் வீடு கட்டும் பாமர மக்களுக்கு இது அதிக சுமையை ஏற்படுத்துகிறது. இந்நிலை நீடித்தால், நாடெங்கும் கட்டுமானத்துறையை நம்பியிருக்கும் சுமார் 4 கோடி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். 

கிரெடாய் அமைப்பு இப்பிரச்சனையை தேசிய அளவில் எடுத்துச் சென்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது. சிமென்ட் மற்றும் ஸ்டீல் விலை உயர்வுக்கு தேசிய அளவில் பல தலைவர்களும் அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் வி.கே.சிங் செப்டம்பர் மாதத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, தாறுமாறாக விலை ஏற்றம் செய்யும் சிமென்ட கம்பெனிகளைக் கண்டித்தார். சிறுகுறு தொழில்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஸ்டீல் மற்றும் சிமென்ட் தயாரிப்பாளர்களைக் கண்டித்து இந்தத் தகவலை பிரமரிடம் எடுத்துச் சென்றுள்ளார். நாடெங்கும் கொரானா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லக்கூடிய இச்சூழலில் இந்த விலை உயர்வு ஒரு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...