பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டாரப் பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், ஆனைமலை உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டூர் பகுதியில் கேரளாவை நோக்கி நான்கு சக்கர வாகனம் ஒன்று சென்றது.

வாகனத்தை நிறுத்தியபோது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். சிறிது தூரம் துரத்திச் சென்று வாகனத்தை வழிமறித்தபோது ஓட்டுனர் தப்பிச் சென்று விட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...