கோவை: கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீபை விடுவிக்க வேண்டும் என்று கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகை செய்யும் போராட்டம் நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீஃப் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வலுத்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகை செய்யும் போராட்டம் கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் தலைவர் முஹம்மது அசாருதீன் தலைமையில் மாவட்டச் செயலாளர் அபுதாஹீர் முன்னிலையில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசு சித்தாந்தங்களை எதிர்க்கும் கருத்தாளர்களையும், அரசியல் எதிரிகளையும், மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடும் நபர்களையும் வேட்டையாட மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது. அரசு நிறுவனங்கள் சங் பரிவாரின் சிப்பாய்களாக மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு ஜனநாயகத்தை விரும்பும் அனைவருக்கும் உண்டு. ரவூப் ஷரீஃப் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனாலும் சட்டத்துக்கு புறம்பான முறையில் அவரை கைது செய்துள்ளனர்.

குடியுரிமைச் சட்டத்தை திருத்தி அமல்படுத்தப்படுவதற்கு முன் சங் பரிவாரை எதிர்க்கும் தலைவர்களையும், இயக்கங்களையும் அச்சுறுத்துவதற்காக பாஜக எடுக்கும் நடவடிக்கையே இது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை குறிவைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். மாணவர்கள் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவர் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் பலவீனமான எண்ணமாகும். ஆகவே உடனடியாக கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீபை விடுவிக்க வேண்டும். அதேபோல் மக்கள் அனைவரும் பாசிச சங்கப்பரிவார கூட்டங்களுக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்புடன் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று கூறினர்.

இந்தப் போராட்டத்தின்போது கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.