கோவை: யானை பராமரித்து வந்த ஊழியரை யானை தள்ளியதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு வனச்சரகர் ஆறுதல் கூறினார்.

உலாந்தி வனச்சரகம் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள மாரியப்பன் என்ற யானையை மணிகண்டன் என்ற ஊழியர் கடந்த வாரம் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார்.
அப்போது திடீரென யானை தள்ளியதில் கீழே விழுந்த அவரது இடது கை தோள்பட்டைப் பகுதியில் மணிகண்டனுக்கு உள்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அம்பராம்பாளையத்தில் உள்ள ஆல்வா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடித்து அன்றே பணிக்குத் திரும்பினார்.
இதையடுத்து கோழிகமுத்தி திரும்பிய அவர் யானைக்கு மாலை உணவளித்து பணி மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது விழுந்ததில் கையில் மீண்டும் வலி எடுப்பதாக கூறி விடுப்பில் சென்று பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உலாந்தி வனச்சரக அலுவலர் மருத்துவமனை சென்று மணிகண்டனைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.