கோவை: சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுபெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். ஆனால் பதிவு செய்யப்படாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் காலாவதியாகிவிட்டன. இதையடுத்து சாலையோர வியாபாரிகள் குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டைகளை வழங்க வேண்டுமென வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனடிப்படையில் தற்போது மாநகராட்சி சார்பாக சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தக் கணக்கெடுப்பின்போது சாலையோர வியாபாரிகள் சிலர் ஏமாற்ற வாய்ப்புள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டுமென சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் மணி கூறியதாவது:-
மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும். தற்போது எடுக்கும் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பின்போது சிலர் எந்த வியாபாரமும் செய்யாமல் தங்களை சாலையோர வியாபாரிகள் எனக் கூறி அடையாள அட்டைகளை பெற வாய்ப்புள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேர்மையான சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். அதேபோல் கொரோனா சிறப்புக் கடன் வாங்குவதற்காக விண்ணப்பித்த பதிவு செய்யப்பட்ட அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் கிடைக்க மாநகராட்சி சார்பாக முழு முயற்சி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.