கோவை: ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை வரவழைத்து எச்சரிக்கை விடுத்த துணை ஆணையர் ஸ்டாலின் அதையும் மீறி சேட்டை செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோவையில் சமீப காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முன்னாள் குற்றவாளிகளை போலீசார் வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். கொரோனா ஊரடங்கின்போது சட்டம்-ஒழுங்கு நிலைமை அமைதியாக இருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் இந்நிலை தொடராதா? என ஏங்கினர். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கடந்த சில மாதங்களாக குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன. கோவை மாநகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும்பொருட்டு குற்றச் சரித்திர பதிவேடு பராமரிக்கப்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோரின் பெயர், விவரங்கள் இதில் இடம்பெறும். இந்தப் பதிவேட்டைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய ஆய்வின் மூலம் சமீபகாலமாக நடந்து வரும் குற்றங்களில் முன்னாள் ரவுடிகளுக்கு அதிக தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள், முன்னாள் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக கோவை மாநகர போலீசார் நேற்று டாடாபாத் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முன்னாள் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் ரவுடிகள் குற்றவாளிகளிடம் பேசினார். அவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து குடும்பத்தை கவனிக்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார். மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து துணை கமிஷனர் ஸ்டாலின் கூறியதாவது:-
அனைத்து முன்னாள் குற்றவாளிகள், ரவுடிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னாள் ரவுடிகள் சிலர் ஆட்டோ டிரைவர்கள், கூலித் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். புதிய குற்றங்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதையும் மீறி அவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ கூலிப்படையாக அடியாட்களாக இருக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பார்க்கும் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் ஓராண்டு சிறைத் தண்டனை நிச்சயம் என்பதும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.