கோவை: சூரிய மண்டலத்தின் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் நெருக்கமாகத் தோன்றும் வானியல் நிகழ்வை கோவையில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர்.

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வரும் வியாழன் மற்றும் சனி கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நேற்று நிகழ்ந்தது. சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கோள்களும் 0.08 டிகிரி அளவுக்கு ஒரே நேர்கோட்டில் மிக நெருக்கமாக சந்தித்த நிலையில் தற்போது இரு கோள்களும் 0.01 டிகிரி அளவுக்கு மிக நெருக்கமாக ஒரே நேர்கோட்டில் சந்தித்தன.
சூரிய மண்டலத்தில் ஆறாவது கோளான சனி தென்மேற்கு திசையில் வியாழனுக்கு இடதுபுறத்தில் தோன்றியது. 'கிரேட் கன்ஜக்சன்' எனப்படும் இந்த அரிய வானியல் நிகழ்வை சிறப்பு உபகரணங்களில்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. ஆனாலும் இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதை தொலைநோக்கியில் தெளிவாகப் பார்க்க இயலும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கோவையில் நேற்று மாலை 6.30 மணிக்குப் பிறகு இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு தென்பட்டது. இதனை குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கற்பகம் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருந்தது.

இரண்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது தெளிவாக தென் பட்டதாகவும், தொலைநோக்கியில் பார்க்கும்போது துணைக்கோள்களும் தெளிவாக தெரிந்ததாக பார்வையிட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.