கோவை: கோவை தாஜ் ஹோட்டலில் ஜெர்மன் GIZ அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைப்பது குறித்த பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ஜெர்மன் GIZ அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைத்தல் குறித்து கோவை மாநகராட்சியின் அனைத்து செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று 21.12.2020 கோவை தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பினை மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் மூலம் கோவை, புவனேஸ்வர் மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் ஜெர்மன் GIZ அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைக்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் பாதுகாப்பான சாலைகள் அமைப்பது, மோட்டார் இல்லா வாகனப் போக்குவரத்து அமைப்பது, பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு சாலை வடிவமைத்தல், சாலையோர வியாபாரிகள், முதியோர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பானதாக ஒரு தெரு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
தற்போது, கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகள் எவ்வாறு வடிவமைத்து இருக்க வேண்டும் என்பது குறித்து செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் ஒரு தெருவானது வாகனப் போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு தருவதன் முக்கியத்துவத்தை குறித்தும், நடைபாதைகள், தெருவிளக்குகள் அமைப்பது குறித்தும் இப்பயிற்சியின் மூலம் விளக்கப்படுகிறது. ஜெர்மன் அரசுடைய GIZ அமைப்பின் மூலம் இவை செயல்படுத்தப்படுகிறது.
இப்பயிற்சியானது டிசம்பர் 21 இன்று முதல் 22, 26, 30 மற்றும் 2021 ஜனவரி 6, 9, 11 ஆகிய தேதிகள் என மொத்தம் 7 நாட்கள் நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார், மாநகராட்சி அனைத்து செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள், GIZ பயிற்சியாளர் வித்யா மோகன்குமார், GIZ ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனா்.