ஐ.டி ஊழியர் விஷம் குடித்து சாவு. காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை!

கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார்.


கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார்.

நேற்று வீட்டிலுள்ள அறையில் வேலை செய்து கொண்டிருந்த ஜெகநாதன் திடீரென்று விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கிச் சரிந்தார். இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி ஊழியர் ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சாவுக்கு காதல் தோல்வியா? மன உளைச்சலா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...